சில UPSC வினாக்கள்!
இவற்றுக்கான பதில்கள் அடுத்த பதிவில்!
1. ஒரு பச்சை முட்டையை கான்கிரீட் தளத்தில் அது உடையாதவாறு (ஐந்தடி உயரத்திலிருந்து) போடுவது எப்படி?
2. பாதி ஆப்பிளை போல இருக்கும் ஒரு பொருள் என்ன?
3. காலை உணவிற்கு (Breakfast) உண்ணவே முடியாதது என்ன?
4. ஒரு மனிதன் எட்டு நாட்கள் உறங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
5. ஒருவர் ஒரு கையில் 3 ஆப்பிள்களும் 4 ஆரஞ்சுகளும், மற்றொரு கையில் 4 ஆப்பிள்களும் 3 ஆரஞ்சுகளும் வைத்திருந்தால், அவர்
மொத்தத்தில் என்ன வைத்திருக்கிறார்?
6. ஓரு சுவரை கட்ட எட்டு மனிதர்களுக்கு 10 மணி நேரம் ஆனால், அதைக் கட்ட 4 மனிதர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
4 மறுமொழிகள்:
1. ஒரு பச்சை முட்டையை கான்கிரீட் தளத்தில் அது உடையாதவாறு (ஐந்தடி உயரத்திலிருந்து) போடுவது எப்படி?
எப்படி வேண்டுமானாலும் போடலாம். போடும்போதுதானே உடையகூடாது
2. பாதி ஆப்பிளை போல இருக்கும் ஒரு பொருள் என்ன?
மற்றொரு பாதி
3. காலை உணவிற்கு (Breakfast) உண்ணவே முடியாதது என்ன?
லஞ்ச், டின்னர்.
4. ஒரு மனிதன் எட்டு நாட்கள் உறங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
எட்டு இரவுகள் இருக்கிறதே! உறங்கலாம்.
5. ஒருவர் ஒரு கையில் 3 ஆப்பிள்களும் 4 ஆரஞ்சுகளும், மற்றொரு கையில் 4 ஆப்பிள்களும் 3 ஆரஞ்சுகளும் வைத்திருந்தால், அவர்
மொத்தத்தில் என்ன வைத்திருக்கிறார்?
ரெண்டு கை, அதுல மொத்தம் ஏழு ஆப்பிள் ஏழு ஆரஞ்ச்.
6. ஓரு சுவரை கட்ட எட்டு மனிதர்களுக்கு 10 மணி நேரம் ஆனால், அதைக் கட்ட 4 மனிதர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
அதே 10மணி நேரம். ஒரு ஆளுக்கும்!
இதெல்லாம் ஏற்கனவே வலைப்பதிவிலே வந்த மாதிர்டி இல்லை?!
Dear ரோசா,
2,3,4 -க்கான உங்கள் பதில்கள் perfectly alright! UPSC-யில் சொல்லப்பட்ட சிறந்த பதில்களுடன் ஒத்துப்போகின்றன :-)
வினா 1-க்கான பதிலும் வித்தியாசமாகவே உள்ளது!
1,5,6 -க்கான சிறந்த விடைகள் (UPSC எழுதியவர்களிலிருந்து!) இதோ!
1. கான்கிரீட் தளங்களை உடைப்பது மிகவும் கடினம்!5. ரெண்டு பெரிய கைகள், அதுல மொத்தம் ஏழு ஆப்பிள் ஏழு ஆரஞ்ச்.
6. The mathematical answer is actually 20. ஆனால், "சுவர் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டது!" என்பதே UPSC-யில் அளிக்கப்பட்ட சிறந்த பதில்!
ஒரு கணித வித்தை. ஒரு கேள்விக்கான: உங்கள் நீ .... ண்ட பதிலைப் படித்து தலை சுற்றல் வந்து விட்டது :-) இத்தனைக்கும், படிக்கும் காலத்தில், 'கணக்கில் கெட்டி' என்று பெயர் வாங்கியவன் தான் நான்!!!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
கேள்வி 6க்கு ஒரு சிறந்த பதில்.
கட்டி முடித்த சுவற்றை ஏன் மறுபடியும் கட்ட வேண்டும்.
இதே கேள்விகளை எற்கெனவே போஸ்டன் பாலா(என் நினைவு சரியாக இருக்கிறதென்று நினைக்கிறேன்) கேட்டிருக்கிறார்.
முதல் கேள்விக்கு இன்னொரு பதில். கான்க்ரீட் தளம் தரையாக இருக்கும் 5 அடி ஆழத்துக்குத் தண்ணிர் நிரம்பிய குள்த்தில் பச்சை முட்டையைப் போட்டால் தரையைத் தொடும்போது அது உடையாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment